சேமிப்பிடத்தைக் காலியாக்குதல்

ஆப்ஸையும் மீடியாவையும் அதிகளவில் பதிவிறக்கவோ உங்கள் மொபைலை நன்றாக இயங்கச் செய்யவோ அதிலுள்ள இடத்தைக் காலியாக்கலாம்.

  • உங்கள் தரவை (இசை, படங்கள் போன்றவை) வைத்திருக்க நீங்கள் பயன்படுத்தும் இடமே சேமிப்பகமாகும்.
  • நீங்கள் நிரல்களை (ஆப்ஸ், Android சிஸ்டம் போன்றவை) இயக்கும் இடமே நினைவகமாகும்.

முக்கியமானது: இந்தப் படிகளில் சில, Android 9 மற்றும் அதற்குப் பிந்தைய பதிப்புகளில் மட்டுமே செயல்படும். உங்கள் Android பதிப்பைத் தெரிந்துகொள்வது எப்படி என அறிக.

சேமிப்பகத்தைக் காலியாக்குதல்

படங்களை அகற்றுதல்
Google Photosஸில் காப்புப் பிரதி எடுத்தால், உங்கள் மொபைலிலோ டேப்லெட்டிலோ உள்ள நகல்களை நீக்கிக் கொள்ளலாம். இணையத்து��ன் உங்கள் சாதனம் இணைக்கப்பட்டிருக்கும்போது காப்புப் பிரதி எடுக்கப்பட்டவற்றை ஆப்ஸில் கண்டறியலாம். படங்களையும் வீடியோக்களையும் உங்கள் சாதனத்தில் இருந்து நீக்குவது எப்படி என அறிக.
பதிவிறக்கிய திரைப்படங்கள், இசை & பிற மீடியாவை அகற்றுதல்

Google Playயில் இருந்து உள்ளடக்கத்தை நீக்க:

  1. Play மியூசிக், Play மூவீஸ் & டிவி போன்ற உள்ளடக்கமுள்ள Google Play ஆப்ஸைத் திறக்கவும்.
  2. மெனு Menu அதன் பிறகு அமைப்புகள் அதன் பிறகு பதிவிறக்கங்களை நிர்வகித்தல் என்பதைத் தட்டவும்.
  3. பதிவிறக்கப்பட்டவை Downloaded அதன் பிறகு அகற்று என்பதைத் தட்டவும்.

பிற மூலங்களில் இருந்து உள்ளடக்கத்தை நீக்க, அதைப் பதிவிறக்குவதற்குப் பயன்படுத்திய ஆப்ஸிலிருந்தே நீக்கவும்.

ஆப்ஸ் & ஆப்ஸ் தரவை அகற்றுதல்

செயலிழந்த ஆப்ஸை மூடுதல்

ஆப்ஸை நீங்கள் வழக்கமாக மூட வேண்டியதில்லை. ஆனால் ஆப்ஸ் செயல்படவில்லையெனில் ஆப்ஸை மூடவோ உடனே நிறுத்தவோ முயலலாம். செயல்படாத ஆப்ஸைப் பிழையறிந்து திருத்துவது எப்படி என அறிக.

நீங்கள் பயன்படுத்தாத ஆப்ஸை நிறுவல் நீக்குதல்

நீங்கள் நிறுவல் நீக்கும் ஆப்ஸ் பிறகு உங்களுக்குத் தேவைப்பட்டால் மீண்டும் அதைப் பதிவிறக்கிக் கொள்ளலாம். ஏற்கெனவே ஆப்ஸுக்குப் பணம் செலுத்தியிருந்தால் மீண்டும் அதை வாங்கத் தேவையில்லை. ஆப்ஸை நிறுவல் நீக்குவது எப்படி என்பதை அறிக.

ஆப்ஸின் தற்காலிகச் சேமிப்பையும் தரவையும் அழித்தல்

உங்கள் மொபைலிலுள்ள அமைப்புகள் ஆப்ஸ் மூலம் ஆப்ஸின் தற்காலிகச் சேமிப்பையும் தரவையும் அழிக்கலாம். மொபைலைப் பொறுத்து அமைப்புகள் மாறுபடலாம். கூடுதல் தகவல்களுக்கு உங்கள் சாதன உற்பத்தியாளரிடமிருந்து உதவி பெறுங்கள்.

  • தற்காலிகச் சேமிப்பை அழித்தல்: தற்காலிகத் தரவை நீக்கும். அடுத்த முறை நீங்கள் திறக்கும்போது சில ஆப்ஸ் மெதுவாக இயங்கக்கூடும்.
  • தரவின் சேமிப்பகத்தை அழித்தல்: அனைத்து ஆப்ஸ் தரவையும் நிரந்தரமாக நீக்கும். முதலில் ஆப்ஸில் உள்ள தரவை நீக்க முயலவும்.
சேமிப்பிடத்தைக் காலியாக்குவதற்கு��் தானாகவே ஆப்ஸைக் காப்பகப்படுத்துங்கள்

புதிய ஆப்ஸுக்கான சேமிப்பிடத்தைக் காலியாக்க, நீங்கள் அடிக்கடிப் பயன்படுத்தாத ஆப்ஸை உங்கள் சாதனம் தானாகவே காப்பகப்படுத்தும். இந்த அமைப்பு இயக்கத்தில் இருக்கும்போது, நீங்கள் அடிக்கடிப் பயன்படுத்தாத ஆப்ஸ் அகற்றப்படும். ஆனால் ஆப்ஸில் உள்ள உங்கள் தனிப்பட்ட தரவு சேமிக்கப்படும். ஆப்ஸ் ஐகான் உங்கள் சாதனத்தில் தொடர்ந்து காட்டப்படும். Google Playயில் ஆப்ஸ் இருக்கும் வரை அதை நீங்கள் மீண்டும் பதிவிறக்க முடியும்.

நீங்கள் ஆப்ஸை நிறுவ முயலும்போது போதுமான சேமிப்பிடம் இல்லையெனில் தானாகவே ஆப்ஸைக் காப்பகப்படுத்துமாறு உங்களுக்குத் தெரிவிக்கப்படும். சாதனம் தானாகவே ஆப்ஸைக் காப்பகப்படுத்தும் விதத்தை அமைக்க:

  1. Play Store ஆப்ஸை திறக்கவும்.
  2. அமைப்புகள்அதன் பிறகு பொது என்பதற்குச் செல்லவும்.
  3. தானாகவே ஆப்ஸைக் காப்பகப்படுத்து என்பதை இயக்கவும்/முடக்கவும்.
ஃபைல்களை நீக்குதல் அல்லது நகர்த்துதல்

பதிவிறக்கிய ஃபைல்களை நீக்குதல்

பதிவிறக்கிய ஃபைல்களைக் கண்டறிவதும் நீக்குவதும் எப்படி என அறிந்துகொள்ள உங்கள் மொபைல் உற்பத்தியாளரின் உதவித் தளத்திற்குச் செல்லவும்.

ஃபைல்களைக் கம்ப்யூட்டருக்கு நகலெடுத்தல்

USB கேபிளைப் பயன்படுத்தி ஃபைல்களையும் ஃபோல்டர்களையும் கம்ப்யூட்டருக்கு நகர்த்தலாம், அதன் பிறகு அவற்றை மொபைலில் இருந்து நீக்கலாம். மொபைலுக்கும் கம்ப்யூட்டருக்கும் இடையே ஃபைல்களை மாற்றுவது எப்படி என அறிக.

நினைவகத்தைப் பார்த்தலும் காலியாக்குதலும்

ஆப்ஸை நீங்கள் வழக்கமாக மூட வேண்டியதில்லை. ஆனால் ஆப்ஸ் செயல்படவில்லையெனில் ஆப்ஸை மூடவோ உடனே நிறுத்தவோ முயலலாம். செயல்படாத ஆப்ஸைப் பிழையறிந்து திருத்துவது எப்படி என அறிக.

உதவிக்குறிப்பு: அளவுக்கு அதிகமான நினைவகத்தை ஆப்ஸ் பயன்படுத்துவதாகக் கருதினால் ஆப்ஸை நீங்கள் நீக்கிவிடலாம். ஆப்ஸை நிறுவல் நீக்குவது எப்படி என்பதை அறிக.

தொடர்புடைய தகவல்கள்

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
Google ஆப்ஸ்
முதன்மை மெனு
12523931131598713527
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
84680
false
false