உங்கள் Google Play Store அனுபவத்தைப் பிரத்தியேகமாக்குதல்

உங்கள் பிரத்தியேக Google Play அனுபவத்தைப் புரிந்துகொள்ளுதல்

உங்கள் அனுபவத்தை மேம்படுத்த உதவ, உங்களுக்கு ஏற்ற தொடர்புடைய உள்ளடக்கத்தை Google Play காட்டலாம். ஆப்ஸ் மற்றும் புத்தகப் பரிந்துரைகள், ஆஃபர்கள், தேடல் முடிவுகள் ஆகியவை இதில் அடங்கக்கூடும். Play சூழலமைப்பு முழுவதிலும் சிறந்த அனுபவத்தை உங்களுக்கு வழங்க உதவ, Google Playயிலும் Google Play நிர்வகிக்கும் ஆப்ஸிலும் கேம்களிலும் இந்தப் பரிந்துரைகள் மற்றும் ஆஃபர்கள் காட்டப்படலாம். உங்கள் அனுபவங்களைப் பிரத்தியேகமாக்க Play பயன்படுத்தும் செயல்பாடுகளுக்கான சில உதாரணங்கள்: உங்கள் தேடல்கள், இம்ப்ரெஷன்கள், Google Play Games மற்றும் உங்கள் Google Play Games சுயவிவரம் தொடர்பான செயல்பாடுகள், உங்கள் ஆப்ஸ் உபயோகம்.

பிரத்தியேகமாக்கம் & செயல்பாட்டுச் சேகரிப்பை இயக்குதல் அல்லது முடக்குதல்

உங்கள் Google Play பிரத்தியேகமாக்கல் அமைப்புகளை மாற்ற:

  1. Google Play Storeரை Google Play திறக்கவும்.
  2. உங்கள் சுயவிவரப் படம் அதன் பிறகு Playயில் பிரத்தியேகமாக்கம் அதன் பிறகு Play பிரத்தியேகமாக்கம் மற்றும் பதிவு என்பதைத் தட்டவும்.
  3. இணையம் மற்றும் ஆப்ஸ் செயல்பாடு என்பதை இயக்கவும்/முடக்கவும்.

உதவிக்குறிப்புகள்:

  • இணையம் மற்றும் ஆப்ஸ் செயல்பாட்டை நீங்கள் இயக்கினால் விரைவான, மேம்பட்ட தேடல் முடிவுகள், உங்கள் செயல்பாட்டின் அடிப்படையிலான ஆப்ஸ் மற்றும் உள்ளடக்கப் பரிந்துரைகள், ஆஃபர்கள், அடிக்கடி நீங்கள் பயன்படுத்தும் ஆப்ஸுக்கான விரைவான ஆப்ஸ் புதுப்பிப்புகள் ஆகியவற்றைப் பெறலாம்.
  • இணையம் மற்றும் ஆப்ஸ் செயல்பாட்டை நீங்கள் முடக்கினால் Google Play உங்களின் எதிர்கால ஆப்ஸ் உபயோகத்தைச் சேமிக்காது அல்லது உங்களின் Google Play அனுபவத்தைப் பிரத்தியேகமாக்க அந்தத் தரவைப் பயன்படுத்த முடியாது.

இணையம் மற்றும் ஆப்ஸ் செயல்பாடு குறித்து மேலும் அறிக.

உங்கள் பிரத்தியேகமாக்க விருப்பத்தேர்வுகளை நிர்வகித்தல்

முக்கியம்: இணையம் மற்றும் ஆப்ஸ் செயல்பாடு முடக்கப்பட்டால் Play பிரத்தியேகமாக்க விருப்பங்களை நீங்கள் நிர்வகிக்க முடியாது.

சில தரவு வகைகளுக்கு நீங்கள் பிரத்தியேகமாக்கத்தை இயக்க விரும்பவில்லை எனில், உங்களுக்கான முடிவுகளையும் பரிந்துரைகளையும் பிரத்தியேகமாக்க உங்கள் கணக்கில் எந்தெந்தத் தரவு வகைகளை Play பயன்படுத்தலாம் என்பதை நீங்கள் Google Play Storeரில் கட்டுப்படுத்தலாம்.

உதவிக்குறிப்பு: நீங்கள் செய்யும் மாற்றங்கள் செயல்பாட்டிற்கு வர 24 மணிநேரம் வரை ஆகலாம்.

உங்கள் சாதன விவரங்கள்

மேலும் பிரத்தியேகமான அனுபவங்களை வழங்க, Google Playயை நீங்கள் பயன்படுத்திய சாதனங்கள் தொடர்பான தகவல்களை Play பயன்படுத்தலாம் (தயாரிப்பு, மாடல் போன்றவை).

பிரத்தியேகமாக்கத்தை மேம்படுத்த உங்கள் கணக்குடன் தொடர்புடைய சாதனங்கள் குறித்த தகவல்களை Play பயன்படுத்தலாமா என்பதைக் கட்டுப்படுத்த:

  1. Google Play Storeரை Google Play திறக்கவும்.
  2. உங்கள் சுயவிவரப் படம் அதன் பிறகு Playயில் பிரத்தியேகமாக்கம் அதன் பிறகு பிற Play பிரத்தியேகமாக்கல் அமைப்புகள் என்பதைத் தட்டவும்.
  3. உங்கள் சாதன விவரங்கள் என்பதை இயக்கவும்/முடக்கவும்.

சாதன விவரங்களின் அடிப்படையிலான பிரத்தியேகமாக்கத்தை நீங்கள் முடக்கினால், உங்கள் சாதனங்களுக்கான சரியான ஆப்ஸ் மற்றும் கேம்களை எங்களால் காட்ட முடிவதையும் நீங்கள் Play Storeரில் உலாவும்போது சரியான அனுபவத்தை நாங்கள் வழங்குவதையும் உறுதிசெய்வதற்காக உங்கள் சாதன விவரங்களை Play தொடர்ந்து பயன்படுத்தும்.

உங்கள் Play உள்ளடக்கம்

ஆப்ஸ், புத்தகங்கள், கேம்கள் போன்று Play மூலம் நீங்கள் வாங்கியவற்றின்/பெற்றவற்றின் அடிப்படையில் உங்கள் அனுபவத்தைப் பிரத்தியேகமாக்கலாம். நீங்கள் வாங்கியவற்றுடன் தொடர்புடைய தரவை Play Storeரிலும் Play சூழலமைப்பு முழுவதும் உள்ள பிற அனுபவங்களிலும் பிரத்தியேகமாக்கத்திற்காகப் பயன்படுத்த வேண்டாம் என்று Playயில் தேர்வுசெய்யலாம். உதாரணத்திற்கு, குறிப்பிட்ட ஆப்ஸுக்குப் பிரத்தியேகமாக்கத்தை நீங்கள் முடக்கினால் ஆப்ஸ் உபயோகம், பர்ச்சேஸ்கள், ஆஃபர்கள், அந்த ஆப்ஸை எப்போது நிறுவினீர்கள் அல்லது நிறுவல் நீக்கினீர்கள் என்ற தகவல், Google Play Games மற்றும் அந்த ஆப்ஸுடன் தொடர்புடைய உங்கள் Google Play Games சுயவிவரம் தொடர்பான செயல்பாடு போன்ற தரவு பிரத்தியேகமாக்கத்திற்காகப் பயன்படுத்தப்படாது.

உங்கள் அனுபவத்தைப் பிரத்தியேகமாக்க எவையெல்லாம் பயன்படுத்தப்படலாம் என்பதைக் கட்டுப்படுத்த:

  1. Google Play Storeரை Google Play திறக்கவும்.
  2. உங்கள் சுயவிவரப் படம் அதன் பிறகு Playயில் பிரத்தியேகமாக்கம் அதன் பிறகு பிற Play பிரத்தியேகமாக்கல் அமைப்புகள் என்பதைத் தட்டவும்.
  3. “உங்கள் Play உள்ளடக்கம்” என்பதன் கீழ் நிர்வகியுங்கள் என்பதைத் தட்டவும்.
  4. “உங்கள் உள்ளடக்கம்” என்பதன் கீழ், குறிப்பிட்ட ஆப்ஸ்/உள்ளடக்கத்தை இயக்கவும் அல்லது முடக்கவும்.

உங்கள் தரவு சேமித்து வைத்திருக்கப்படும் கால அளவைத் தேர்வுசெய்தல்

உங்கள் Play பதிவுத் தகவல் எவ்வளவு காலத்திற்குச் சேமிக்கப்பட வேண்டும் என்பதைத் தேர்வுசெய்யலாம். மேலும் அதை எப்போது வேண்டுமானாலும் நீக்கலாம்.

உங்கள் Play பதிவுத் தகவல்கள் சேமிக்கப்படும் கால அளவை மாற்ற:

  1. Google Play Storeரை Google Play திறக்கவும்.
  2. உங்கள் சுயவிவரப் படம் அதன் பிறகு Playயில் பிரத்தியேகமாக்கம் அதன் பிறகு Play பதிவு என்பதைத் தட்டவும்
  3. “தானாக நீக்குதல் (இயக்கப்பட்டுள்ளது)” என்பதன் கீழ் X மாதங்களுக்கு முந்தைய பதிவை நீக்குதல் என்பதைத் தட்டவும்.
    • தானாக நீக்குதலை ஏற்கெனவே முடக்கியிருந்தால் “தானாக நீக்குதல் (முடக்கப்பட்டுள்ளது)” என்பதன் கீழ் தானாக நீக்கும் விருப்பத்தைத் தேர்வுசெய்தல் என்பதைத் தட்டவும்.
  4. உங்கள் செயல்பாட்டை எவ்வளவு காலம் வைத்திருக்க விரும்புகிறீர்களோ அந்த விருப்பத்தைத் தேர்வுசெய்யவும்.
  5. அடுத்து என்பதைத் தட்டவும்.
  6. உங்களுக்கு விருப்பமான கால அளவைச் சேமிக்க, உறுதிசெய் என்பதைத் தட்டவும்.

சமீபத்திய Play பதிவைப் பார்த்தல்

உங்கள் Play பதிவில் சேகரிக்கப்பட்டுள்ள Play Store செயல்பாட்டை நீங்கள் பார்க்கலாம்.

சமீபத்திய Play பதிவைப் பார்க்க:

  1. Google Play Storeரை Google Play திறக்கவும்.
  2. உங்கள் சுயவிவரப் படம் அதன் பிறகு Playயில் பிரத்தியேகமாக்கம் அதன் பிறகு Play பதிவு என��பதைத் தட்டவும்.
  3. திரையின் கீழ்ப்பாதியில் உங்களின் சமீபத்திய Play பதிவு காட்டப்படும்.

தொடர்புடைய தகவல்கள்

இணையம் மற்றும் ஆப்ஸ் செயல்பாட்டைக் கண்டறிதலும் கட்டுப்படுத்துதலும் 

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
Google ஆப்ஸ்
முதன்மை மெனு
260545563651752161
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
84680
false
false